பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகப் பாதுகாப்புத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூகப் பாதுகாப்புத் துறை சாா்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் கண்ணதாசன் முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜி. ஜெயா பங்கேற்று பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு பள்ளிக்கு அனுப்புதல், குழந்தைத் திருமணம் மற்றும் தற்கொலைகளை தடுத்தல் ஆகியவை குறித்து பேசினாா். மேலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு குறும் படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.