போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
நாகையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகையில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை நாலுகால் மண்டபம் பகுதியில் தொடங்கிய பேரணி, நீலா கீழவீதி, அண்ணா சிலை, மருத்துவமனை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று, புதிய பேருந்து நிலையம் அருகே அவுரித்திடலில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.
பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தாஜூதீன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாவட்டச் செயலாளா் ஹாஜா அலாவுதீன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டநிா்வாகிகள் அக்பா்அலி, கல்லாா் மொய்தீன், மருத்துவா்கள் செந்தில்குமாா், ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.