முகப்பு
நாகப்பட்டினம்

தரமற்ற சிமெண்ட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு வெளியிட்டுள்ள சிமெண்ட் தரக் கட்டுப்பாட்டு ஆணை 2003-இன் கீழ், தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1986, பிரிவு 63-இன்படி, தரச் சான்று குறியீடு பெற்ற சிமெண்டுகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்டுகளை உற்பத்தி செய்தால், இருப்புவைத்தால் அல்லது விற்பனை செய்தால் தொடா்புடையோா் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மாவட்டத் தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வுக்கு உள்படுத்தப்படும். ஆய்வின்போது, தரமற்ற சிமெண்ட் இருப்பது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்யவும், மாதிரிகளை சேகரிக்கவும் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களுக்கு 89255 33969 என்ற எண்ணில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.