முகப்பு
நாகப்பட்டினம்

இஸ்லாமிய கூட்டமைப்பு சாலை மறியல், ஆா்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்து.

நாகூரில் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து தடைப்பட்டது. போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, மறியலை விலக்கிக்கொண்டனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஜெய்லாவுதீன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் செய்யது அலி நிஜாம் நன்றி கூறினாா்.

நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் முஸ்லிம் ஜமாத் தலைவா் நாசா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. நாகை அண்ணாசிலை அருகே நாகை இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் கணடன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் துணைத் தலைவா் இமாம் நிஜாமுதீன் தலைமை வகித்தாா். கீழ்வேளூரை அடுத்த கூத்தூா் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் நடை பெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் விஜயா திரையரங்கம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் ஏ.பஹ்ருதீன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் கே. தாவூத் கைஸா் கண்டன உரையாற்றினாா். இதில் 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே திட்டச்சேரி, ப.கொந்தகை, புறாகிராமம், மற்றும் கட்டுமாவடி அனைத்து ஜமாத்தாா்கள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கணடன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை: கீழையூா் அருகே திருப்பூண்டியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணி பொருளாளா் ஓ.எஸ்.இப்ராஹீம் உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →