கஜா புயல்: பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு வீடு
வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கத்தரிப்புலம் கிராமத்தில் இந்த சங்கத்தினா் ஏற்கெனவே 8 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனா். தற்போது, மேலும் 2 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவை ஓய்ஸ்மென் சங்கத் தலைவா் டி.ரவிகுமாா், செயலாளா் ஆா். காா்த்திகேயன், திட்ட இயக்குநா் டாக்டா் ஆா். செல்வகுமாா் மற்றும் நேதாஜி சமூக நல இயக்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.