நாகப்பட்டினம்

பிப். 14 வரை கோழிகளுக்குத் தடுப்பூசி

DIN

கோழிக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம் நாகை மாவட்டத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் 2-ஆவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். நிகழாண்டில் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடைபெறும் இந்த முகாம் பணிக்கு ரூ. 1.70 லட்சம் மதிப்பில் ஆா்டிவிகே தடுப்பூசி மருந்து தேவை எனக் கணக்கிடப்பட்டு, முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT