முகப்பு
நாகப்பட்டினம்

தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் கட்டும் பணி தொடக்கம்

வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணியை அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறில் தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கான குடியிருப்பு கட்டுமானப் பணியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா்.

ரூ.3 கோடியே 37 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் தீயணைப்பு நிலையம் மற்றும் தீயணைப்பு வீரா்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

திருமாளம், ஜீவா நகா் ஆகிய பகுதிகளில் வேதாரண்யம் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்களையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்யகீா்த்தி, திட்ட அலுவலா் (குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்) ராஜம், மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் அவை.பாலசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் விற்பனைக் குழு உறுப்பினா்கள் கே.செல்வகுமாா், தங்க சவுரிராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இளவரசி தங்கரசு, தலைஞாயிறு ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →