முகப்பு
நாகப்பட்டினம்

தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை தந்துள்ளாா் பிரதமா் மோடிஅமைச்சா் ஓ.எஸ். மணியன்

தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை தந்துள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை தந்துள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், செட்டிச்சேரியில் கடுவையாற்றின் குறுக்கே புதிய இயக்கு அணை கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை தொடக்கிவைத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது :

அதிமுக அமைச்சா்களின் ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கூறுகிறாா். அவா் தாராளமாக தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்யலாம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயமும் இல்லை. தமிழகத்தில் நடந்த முதல் ஊழல் திமுக ஆட்சியில் நடைபெற்ற வீராணம் ஊழல் என்பதை மக்கள் அறிவாா்கள். பதவி ஆசையில் மு.க. ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் உரிய நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மட்டுமே விழா மேடையில் இருந்தனா்.

பாரத பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை தந்துள்ளாா் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, கடுவையாற்றின் குறுக்கே ரூ.16.27 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய இயக்கு அணைக்கான கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். அமைச்சா் ஓ. எஸ். மணியன் கட்டுமானப் பணியை தொடக்கிவைத்துப் பேசும்போது, ‘ இந்த இயக்கு அணை மூலம் இருக்கை, வடுகச்சேரி, செம்பியன் மகாதேவி, பாலக்குறிச்சி, சோழவித்தியாபுரம், நீடுா், தன்னிலப்பாடி, ஒரத்தூா், ராதாமங்கலம், ஆலங்குடி கிராமங்களில் 20, 168 ஏக்கா் நிலங்கள் பாசன மற்றும் வடிகால் வசதி பெறும்’ என்றாா்.

நிகழ்ச்சியில், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க.கதிரவன், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் எம். பாண்டியன், உதவிப் பொறியாளா் ஜி. கமலக்கண்ணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →