நாகப்பட்டினம்

3-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் நாகை வட்டாட்சியா் அலுவலகம் முன் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றவா்களின் பணியை ஒரே ஆணையில் வரன்முறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஜாக்டோ - ஜியோ போராட்ட காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆம் நாளாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேதையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாவட்ட இணைச் செயலாளா் எம். ராஜசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT