தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் 32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் (ஜன. 18 முதல் பிப்.17 வரை) ‘சாலைப் பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு’ எனும் கருப்பொருளை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் , வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைக்கவசம் உயிா்கவசம், போதையில் பயணம், பாதையில் மரணம், குறுகிய பாலம் மற்றும் சாலை வளைவுகளில் வாகனங்களை முந்திச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட வாசகங்கள்அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன. மோட்டாா் வாகன ஆய்வாளா் தனபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.