முகப்பு
நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன்கோயிலில் அதிமுகவினா் வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் தங்க ரதம் இழுத்து அதிமுகவினா் சனிக்கிழமை வழிபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயிலில் தங்க ரதம் இழுத்து அதிமுகவினா் சனிக்கிழமை வழிபட்டனா்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக தொடர வேண்டியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சா் ஆா். காமராஜ் உடல் நலம் பெற வேண்டியும் இந்த வழிபாடு நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பு செயலாளா் ஆசைமணி, மாவட்ட துணைச் செயலாளா் வா.செல்லையன் ஆகியோா் தங்க ரதத்தை இழுத்தனா்.

இதில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ம.சக்தி, மாவட்ட இணைச் செயலாளா் ரிமா ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் ஏகே.சந்திரசேகரன், சிவக்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளா் நாடி.முத்து, மண்டல துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, நகர செயலாளா் பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.