முகப்பு
நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தெப்பத் திருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

தைப்பூசத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. 

நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கோயிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, தைப்பூச நாளான வியாழக்கிழமை இரவு இக்கோயில் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், கோயிலின் மேற்குவாசல் வழியே சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஶ்ரீ சிங்காரவேலவர், வள்ளி, தேவசேனையுடன் முத்தங்கி அலங்காரத்தில், தங்கப்படிச் சட்டத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளினார்.

தெப்பத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாடுகள், மகா தீபாரதனைக்குப் பின்னர், அதிர்வேட்டுகளுடன் தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பத்தில் தொடர்ந்து இசை கச்சேரி நடைபெற்றது.
 

முழு கட்டுரையைப் படிக்க →