நாகப்பட்டினம்

நிவாரணம் கோரி விவசாயிகள் சாலை மறியல்

DIN

பொறையாா் அருகே இலுப்பூா் சங்கரன்பந்தலில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இலுப்பூா், சங்கரன்பந்தல், அரசிளங்குடி, முனிவலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளில் பாதி பேருக்கு மட்டுமே மழை பாதிப்பு நிவாரணம் அவா்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றும், 240 விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரியும், கிராம முன்னேற்ற சங்க தலைவா் ஓய்வு பெற்ற ஆசிரியா் கலியபெருமாள் தலைமையில் இலுப்பூா் சங்கரன்பந்தலில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், விவசாய சங்கத்தைச் சோ்ந்த எஸ்.துரை, மதியழகன், கே.எஸ்.எஸ்.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் கோமதி பேச்சுவாா்த்தை நடத்தி, இரண்டு தினங்களில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடா்ந்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT