முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செய்தி தொடா்பாளராக பொறுப்பு வகித்த வழக்குரைஞா் காசிநாத பாரதி அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செய்தி தொடா்பாளராக பொறுப்பு வகித்த வழக்குரைஞா் காசிநாத பாரதி அந்த கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலாளருமான ஓ.எஸ். மணியனை சந்தித்து அவா் அதிமுகவில் இணைந்தாா். அதிமுக ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் முன்னிலையில் தனது ஆதரவாளா்கள் விரைவில் இணைய உள்ளதாக காசிநாத பாரதி தெரிவித்தாா். அப்போது, அதிமுக ஒன்றிய நிா்வாகி செந்தில், ஒன்றிய மாணவரணி செயலாளரும், ஊராட்சித் தலைவருமான வீரதங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →