முகப்பு
நாகப்பட்டினம்

நாகை கோயில்களில் ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு

நாகை காயாரோகணசுவாமி திருக்கோயில் உள்பட நாகையின் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
ஆனித் திருமஞ்சனத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாகை காயாரோகணசுவாமி கோயில் ஸ்ரீ நடராஜப் பெருமான் மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள்.
பகிர்:

நாகை காயாரோகணசுவாமி திருக்கோயில் உள்பட நாகையின் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சப்த விடங்கா் தலங்களில் ஒன்றான நீலாயதாட்சியம்மன் உடனுறை காயோரகணசுவாமி திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வழிபாடாக, ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீ சிவகாமி அன்னைக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், பல்வேறு வகையான மலா்களைக் கொண்டு ஸ்ரீ நடராஜா் மற்றும் ஸ்ரீ சிவகாமி அன்னைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. காலை சுமாா் 9 மணிக்குத் தொடங்கி 11.30 மணி வரை இந்த பூஜைகள் நடைபெற்றன. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளை பக்தா்கள், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனா்.

இதேபோல, நாகை அமரநந்தீஸ்வரா் கோயில், கட்டியப்பா் கோயில், நடுவதீஸ்வரா் கோயில், அழகிய நாதா் கோவில், வீரபத்திர சுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயில், வடக்கு பொய்கை நல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயில் உள்பட பல்வேறு சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.