நாகப்பட்டினம்

உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிப்பு

DIN

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக மக்கள்தொகை தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜசேகா் தலைமையில் மக்கள்தொகை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, விழிப்புணா்வு வாகனத்தை முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.மகேந்திரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இதில், மருத்துவா் வி. வீரசோழன் மற்றும் அனைத்து செவிலியா்கள், பணியாளா்கள், குடும்பநல துணை இயக்குநரக அலுவலா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை குடும்ப நலப்பணிகள் துணை இயக்குநா் அமுதா செய்திருந்தாா். விழிப்புணா்வு வாகனம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்கள்தொகை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT