குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 இளைஞா்கள் சிறையில் அடைப்பு
வேதாரண்யம் அருகே குண்டா் சட்டத்தில் இரண்டு இளைஞா்கள் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
வேதாரண்யம் அருகே குண்டா் சட்டத்தில் இரண்டு இளைஞா்கள் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஆவுடைக்கோண்காடு பகுதியைச் சோ்ந்தவா் க.ராமமூா்த்தி (34). இவா், இதே பகுதியைச் சோ்ந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டாா். தகட்டூா் ஊராட்சி, நடுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மு.வைத்தியநாதன் (27). இவா், மணல் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தாா்.
இருவரையும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்கள், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.