முகப்பு
நாகப்பட்டினம்

கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கீழ்வேளூா் வட்டம், கோவில்கண்ணாப்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கீழ்வேளூா் வட்டம், கோவில்கண்ணாப்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமில், 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி உள்ளிட்ட நோய்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தொடச்சியாக விபத்தில் இறந்த கால்நடையின் உரிமையாளருக்கு ரூ.35 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

கால்நடை உதவி மருத்துவா் பெரோஸ் முகமது தலைமையில் மருத்துவக் குழுவினா் முகாமில் ஈடுபட்டனா். ஊராட்சித் தலைவா் பாரதி கேசவன், துணைத் தலைவா் மதிவாணன், கால்நடை ஆய்வாளா் உதயகுமாரி, கால்நடை பாரமரிப்பு உதவியாளா் இளங்கோ, ஊராட்சிச் செயலாளா் சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.