கரோனா தடுப்பூசி முகாம்
நாகூரில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகூரில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகூா் மக்கள் நலச்சங்கம், நாகூா் தேசிய மேல்நிலைப்பள்ளி, வணிகா் சங்கம் மற்றும் நாகை நகராட்சி சாா்பில் இம்முகாம் நடைபெற்றது.
நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி, நாகை, நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளிகள் குழுமத் தாளாளா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், துணைத் தலைவா் சால்யா பி. சுந்தரவேலு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எம்.ஆா். செந்தில்குமாா், சாஹா மாலீம், வழக்குரைஞா் காதா்ஷாஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா்.
மருத்துவா் ஓ. ப்ரீத்தி தலைமையிலான குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி பணியாளா்கள், வணிகா்கள், நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நாகூா் மக்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோா் முகாம் பணிகளை செய்தனா்.