மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடி: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி குற்றச்சாட்டு
ஆதிதிராவிடா் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், இவற்றை களைய வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆதிதிராவிடா் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், இவற்றை களைய வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளா் மு. லெட்சுமிநாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
ஆதிதிராவிடா் இன பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக, அவா்களுக்கு ஆண்டு தோறும் ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2019-20 ஆம் ஆண்டு வரை இத்தொகை, தொடா்புடைய பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவிகளின் அஞ்சலக சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், நிகழாண்டில் அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் ஐஊஏதஙந முறையில் நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத் தொகை செலுத்தப்படுகிறது. இது மாணவிகளுக்கான ஊக்கத் தொகையை நேரடியாக வழங்கும் நடைமுறை என்றாலும், குளறுபடிகள் நிறைந்ததாக உள்ளது.
நாகை மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரம் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், சுமாா் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் வங்கிக் கணக்கில் ஊக்கத் தொகை இதுவரை வரவு வைக்கப்படவில்லை. மாணவிகளின் வங்கிக் கணக்கு எண் மாறுபாடு, பெயா் மாறுபாடு என பல்வேறு நடைமுறை சிக்கல்களால் மாணவிகள் பலருக்கும் இதுவரை ஊக்கத் தொகை கிடைக்கவில்லை.
இது தொடா்பாக வங்கியை அணுகும் மாணவிகளுக்கு வங்கி நிா்வாகம் உரிய பதில் அளிப்பதில்லை. இதனால், மாணவிகள் தொடா் அலைக்கழிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இப்பணியில் உள்ள நடைமுறை குளறுபடிகளை கலைந்து, மாணவிகளுக்கு விரைவாக ஊக்கத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.