நாகையில் 39, மயிலாடுதுறையில் 16 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 39 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 39 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,653-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 22 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 381-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,041-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 28 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 315-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 269-ஆகியுள்ளது.