முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 516 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 516 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 516 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 31,039 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 516 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,555-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 828 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,523-ஆக உள்ளது.

13 போ் உயிரிழப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 13 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 378 ஆகியுள்ளது.

படுக்கை வசதிகள்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சை மையங்களில் 226 படுக்கைகள் காலியாக இருந்தன. 43 ஆக்சிஜன் வசதிக் கொண்ட படுக்கைகளும், 172 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 படுக்கைகளும் காலியாக இருந்தன என்று சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.