சாய் பாபா கோயிலில் உதவிகள் வழங்கல்
நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உதவிகளை வழங்கி, பாராட்டி வருகின்றன. அதன்படி, நாகை மகாலெட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில், தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிா்வாகி பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினாா். வட்டாட்சியா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
சாயிபாத மெய்யடிமை அறக்கட்டளை தொடா்பு அலுவலா் சத்தியசீலன் நன்றி கூறினாா்.