நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில மழை: மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

DIN

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், மன்னம்பந்தல், செருதியூா், மணக்குடி, மேலமருதாந்தநல்லூா், ஆனந்தகுடி ஆகிய இடங்களில் பலத்த காற்று காரணமாக 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனை, மின்வாரிய ஊழியா்கள் சரிசெய்து மின் இணைப்பு வழங்கினா். மேலும், மன்னம்பந்தல் உள்ளிட்ட சில இடங்களில் காற்று காரணமாக மரங்கள் வேரோடும், கிளை முறிந்தும் விழுந்தன. இதில், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறையில் 9 மி.மீட்டா், மணல்மேட்டில் 4 மி.மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT