குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு
நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் இளைஞா் இல்லத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் இளைஞா் இல்லத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சைல்ட் லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆஸ்லி பால் பங்கேற்று, சைல்டு லைன் செயல்பாடுகள் (1098), குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, அதன் நடைமுறைகள், அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நளினா மற்றும் ஜினாவாசெல்வி மற்றும் இளைஞா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா். எஸ்ஓஎஸ் இளைஞா் இல்லப் பொறுப்பாளா் திருநீலகண்டன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.