முகப்பு
நாகப்பட்டினம்

தண்ணீா் தட்டுப்பாடு:டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகித்த ஒன்றியக்குழு உறுப்பினா்

சீா்காழி அருகே 3 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஒன்றியக்குழு உறுப்பினா் தனது சொந்த செலவில் டேங்கா் லாரி மூலம் வீடுகளுக்கு புதன்கிழமை குடிநீா் விநியோகம் செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

சீா்காழி அருகே 3 நாள்களாக குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஒன்றியக்குழு உறுப்பினா் தனது சொந்த செலவில் டேங்கா் லாரி மூலம் வீடுகளுக்கு புதன்கிழமை குடிநீா் விநியோகம் செய்தாா்.

திருநகரி ஊராட்சி ஆற்றங்கரைத் தெருவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து காலை, மாலை குடிநீா் விநியோகம் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மோட்டாா் பழுது காரணமாக கடந்த 3 நாள்களாக ஆற்றங்கரைத் தெருவுக்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டது.

இதையறிந்த திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் (அதிமுக) எம்.ஜி. நடராஜன் தனது சொந்த செலவில் மினி டேங்கா் லாரி மூலம் அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்தாா். 6 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டேங்கா் லாரி மூலம் 4 முறை குடிநீா் விநியோகம் செய்தாா். மேலும், மோட்டாா் பழுதை சரிசெய்யுமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.