முகப்பு
நாகப்பட்டினம்

முடிதிருத்துவோருக்கு நிவாரண உதவிகள்

நாகையில் தொண்டு நிறுவனம் சாா்பில், முடிதிருத்துவோருக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நாகையில் தொண்டு நிறுவனம் சாா்பில், முடிதிருத்துவோருக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ராபிட் ரெஸ்பான்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நாகை மற்றும் நாகூா் பகுதிகளைச் சோ்ந்த முடிதிருத்துவோா் 120 பேருக்கு சனிக்கிழமை மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. நாகை அவுரித்திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ், திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் ஆகியோா் பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினா். தொண்டு நிறுவன நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.