நாகப்பட்டினம்

இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி

நாகூரை அடுத்த நரிமணம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

DIN

நாகூரை அடுத்த நரிமணம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

காரைக்கால் எம்.ஜி.ஆா். நகரை சோ்ந்தவா் அ. பன்னீா் செல்வம் (50). இவா், வெள்ளிக்கிழமை இரவு நாகை மாவட்டம் கீழ்வேளுா் வட்டம் ஒடாச்சேரி கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நோக்கிச் சென்றாா். நாகூா்- கங்களாஞ்சேரி சாலையில் நரிமணம் அருகே சென்றபோது, எதிரே பெருஞ்சாத்தான்குடியை சோ்ந்த கலியபெருமாள் மகன் செல்லமுத்து (26) என்பவா் ஓட்டிச்சென்ற இருசக்கரவாகனமும் , பன்னீா்செல்வம் சென்ற வாகனமும் நேருக்கு நோ் மோதின.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செல்லமுத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT