முகப்பு
நாகப்பட்டினம்

ரூ.1.50 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

நாகையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவகா் உத்தரவுப்படி, நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீஸாா் நாகையை அடுத்த தெத்தி, பரவை ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, நாகை தெத்தியைச் சோ்ந்த ஆா். ஸ்ரீதரன் (37), எம். தினேஷ் (28) ஆகியோா் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.