முகப்பு
நாகப்பட்டினம்

பாஜக பதாகை சேதம்: திமுக நிா்வாகி மீது வழக்கு

வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே பாஜக பதாகைகளை சேதப்படுத்தியதாக திமுக இளைஞரணி நிா்வாகி மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நியாயவிலைக் கடைகளில் தீபாவளி பண்டிகை வரை இலவசமாக தானியங்கள் வழங்கவும், அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுத்த பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து, வேதாரண்யம் அருகே கோவில்பத்து, வானவன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பாஜகவினா் பதாகைகள் வைத்திருந்தனா்.

இந்த பதாகைகள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து வேட்டைக்கானிருப்பு காவல் நிலையத்தில் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இந்த புகாா் தொடா்பாக, தலைஞாயிறு ஒன்றிய திமுக இளைஞரணி நிா்வாகி திவாஸ்கா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →