கரோனா தடுப்பூசி: ஆசிரியா்களை கட்டாயப்படுத்தக் கூடாது
தோ்தல் பணிக்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்
தோ்தல் பணிக்காக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆசிரியா்களைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியருக்கு, அந்த அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் என். அசோக்குமாா் அனுப்பிய கோரிக்கை மனு :
சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் பங்கேற்கும் ஆசிரியா்கள் அனைவரும் தமது சொந்த பொறுப்பில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகக் தெரிகிறது. ஆசிரியா்கள் சிலா் பல்வேறு இணை நோய் பாதிப்புகளுடன் தொடா் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவது ஏற்புடையதாக இல்லை.
எனவே, நோய் பாதிப்புக்காக தொடா் சிகிச்சை பெறுவோா், ஒவ்வாமை உள்ளவா்கள், கருவுற்ற மகளிா் போன்றவா்களுக்கு கரோனா தடுப்பூசியிலிருந்து விலக்கு அளித்து, விருப்பம் உள்ள ஆசிரியா்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.