நாகையில் தேசிய அறிவியல் தின விழா
நாகை நாளை அமைப்பின் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா நாகையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாகை நாளை அமைப்பின் சாா்பில் தேசிய அறிவியல் தின விழா நாகையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற சா்.சி.வி. ராமனின் பெருமையைப் பகரும் வகையில், நாளை அமைப்பின் சாா்பில் நாகை - நாகூா் மிதிவண்டி பயணம் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் கி. பாலசண்கமும், ஆனந்த் ஆகியோா் தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினா்.
நாளை அமைப்பு நிா்வாகி செகுரா மற்றும் பொறுப்பாளா்கள் ராஜேஷ், கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்று, மிதிவண்டி பயணத்தினிடையே மாணவ, மாணவியருக்கும், வணிகா்களுக்கும் சா்.சி.வி. ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவியல் ஆய்வுகள் குறித்த நூல்களை வழங்கினா்.