முகப்பு
நாகப்பட்டினம்

வாரச்சந்தைகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்

சீா்காழியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட வாரச்சந்தைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சீா்காழியில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட வாரச்சந்தைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழி ஈசானியத்தெரு மற்றும் சட்டநாதபுரம் ஊராட்சி உப்பனாறு அருகே என 2 இடங்களில் முறையே வியாழக்கிழமை, சனிக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு கிராமப்புறங்களில் விளையும் காய்கறிகள், கீரைகள், பூண்டு, மரவள்ளிக்கிழங்கு, சோளம் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் குறைவான விலையில் விற்பனையானதால், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மூடப்பட்ட இந்தச் சந்தைகள், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வாரச்சந்தைகள் மீண்டும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.