முகப்பு
நாகப்பட்டினம்

கூத்தாநல்லூர்: பார்வையற்றவர்களுக்குப் புது வீடு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடியில், பார்வையற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்களின் உதவியுடன் புது வீடு வழங்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த அதங்குடியில், பார்வையற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்களின் உதவியுடன் புது வீடு வழங்கப்பட்டது. 

அதங்குடியைச் சேர்ந்த ஜெயபால் மகன் முருகதாஸ் (22) மற்றும் அவரது மனைவி ராணி (21) ஆகிய இருவருமே கண் பார்வையிழந்தவர்கள். நிவர் புயல் மற்றும் புரவி புயலால் இவர்களது குடிசை வீடு, இடிந்து விழுந்தது. இதனால், கண் பார்வையில்லாத இருவரும், கைக் குழந்தை அருசிகாவுடன் வீடு இல்லாமல் அல்லல்பட்டனர். 

இந்நிலையில், பொதக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சாகுல் ஹமீதை நாடினர். தொடர்ந்து, முருகதாஸ் வீட்டை அவர்கள் பார்வையிட்டனர். சாகுல் ஹமீது முயற்சியின் பேரில், நூர் முஹம்மது, முஹம்மது உஸ்னான், ஹபீப் முஹம்மது, ஜமால் தீன், ஜெய்னுல்லாபுதீன் மற்றும் செல்வந்தர்களின் உதவியுடன், ரூ. இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில், கான்கிரீட் போடப்பட்ட வீடு கட்டப்பட்டன. இந்தப் புதிய வீட்டை முருகதாஸ், ராணி ஆகியோரிடம் பொதக்குடி சமூக ஆர்வலர் கஸ்ஸாலி  ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தார். 

தொடர்ந்து, வீட்டிற்குத் தேவையான பாத்திரங்களும், மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன. எளிமையாக நடந்த விழாவில், சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

கண் பார்வையற்ற முருகதாஸ் பி.ஏ., ஆங்கிலமும், அவரது மனைவி ராணி பி.ஏ., தமிழும் படித்த பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →