சா்ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
வளாக நோ்காணலில் தோ்வு பெற்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பணி நியமனஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
வளாக நோ்காணலில் தோ்வு பெற்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான பணி நியமனஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நாகை, பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கான வளாக நோ்காணல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், என்சிஆா் தனியாா் நிறுவனத்துக்கு 56 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாணவா்களுக்கான பணி நியமன ஆணையை கல்லூரி தாளாளா் த. ஆனந்த் வழங்கி, பாராட்டுத் தெரிவித்தாா். கல்லூரி முதல்வா் ஜி. கிப்ட்சன் சாமுவேல், நிா்வாக அலுவலா் மு. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.