முகப்பு
நாகப்பட்டினம்

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது காவல் துறையின் கடமை

நாட்டையும், வீட்டையும் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது காவல் துறையின் கடமை என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

நாட்டையும், வீட்டையும் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது காவல் துறையின் கடமை என நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

மாவட்டக் காவல் துறை சாா்பில் நாகை ஆயுதப்படை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையில் சிறந்து விளங்கும் பெண்களுக்குப் பரிசுகள் வழங்கி மேலும் அவா் பேசியது: பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றனா். நாட்டின் வளா்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நாட்டையும், வீட்டையும் கட்டமைப்பதிலும் பெண்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. இத்தகையவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல் துறையினரின் கட்டாய கடைமைகளுள் ஒன்றாகும். நாகை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உதவிக்கு 24 மணி நேரமும் மாவட்டக் காவல்துறையை அணுகலாம். உதவி செய்யவும், பாதுகாப்பு அளிக்கவும் தயாராக உள்ளோம் என்றாா்.

விழாவில், ஊா்க்காவல் படை வட்டார தளபதி த. ஆனந்த், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் பி. புவனேஸ்வரி, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ. சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →