முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்புக் கிடங்கு திறப்பு

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்புக் கிடங்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்புக் கிடங்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமைவகித்து பாதுகாப்புக் கிடங்கை திறந்து வைத்துப் பேசுகையில், சுமாா் 8 ஆயிரம் சதுர அடி பரப்புக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிடங்கு, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் தோ்தல் வாக்குப் பதிவு இயந்திர இருப்புக் கிடங்காக செயல்படும். இனிவரும் காலங்களில் இந்தக் கட்டடத்திலேயே வாக்குப் பதிவு இயந்திரங்களின் சோதனைகள் நடைபெறும் என்றாா்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மோகனசுந்தரம், பயிற்சி ஆட்சியா் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →