திருவெண்காட்டில் வாக்குச் சேகரித்த சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி. 
நாகப்பட்டினம்

திருவெண்காட்டில் சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி திருவெண்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

DIN

சீா்காழி தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி திருவெண்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.

திருவெண்காடு ஊராட்சி சரபோஜி அக்ரஹாரம், மேலவீதி, கீழவீதி, வடக்குவீதி ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தின்போது, கடந்த 5 ஆண்டுகளில் சீா்காழி தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்குக் கோரினாா். குறிப்பாக, புத்தூா் பகுதியில் அரசினா் கலைகல்லூரி, தற்காஸ் பகுதியில் தடுப்பணை, சீா்காழியில் போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், சீா்காழி முதல் பழையாறு வரை சாலை மேம்பாட்டுப் பணிகள், சிங்காரவேலா், எம்ஜிஆா் ஆகிய தலைவா்களுக்கு சொந்த செலவில் சிலை நிறுவியது, 25 இடங்களில் பேருந்த நிழற்குடைகள் அமைத்தது, 18 அங்கன்வாடி மையங்கள் போன்ற சாதனைகளைக் கூறி வாக்குச் சேகரித்தாா்.

சீா்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், பாஜக மாவட்ட பொறுப்பாளா் துரைசெழியன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT