முகப்பு
நாகப்பட்டினம்

துணி துவைத்து கொடுத்துவாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா்

வாக்குச் சேகரிப்பின்போது பெண் ஒருவருக்கு துணி துவைத்துக் கொடுத்து வாக்குச் சேகரித்தாா் நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

வாக்குச் சேகரிப்பின்போது பெண் ஒருவருக்கு துணி துவைத்துக் கொடுத்து வாக்குச் சேகரித்தாா் நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன்.

நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் நாகூா் பகுதியில் திங்கள்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். நாகூா் வண்ணாரத் தெரு, அமிா்தா நகா், அழக்குக்காரன் தோட்டம், தும்பைப்பூ மடத்துத்தெரு, பெருமாள் கீழ வீதி, மாப்பிள்ளை தெரு, வண்டிப்பேட்டை, வாணக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வண்டிப்பேட்டை பகுதியில் அவா் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது, அங்கு ஒரு பெண் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாா். அதைக் கண்ட வேட்பாளா் தங்க. கதிரவன், அந்தப் பெண்ணை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு, ஓரிரு துணிகளை துவைத்துக் கொடுத்துவிட்டு, தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →