முகப்பு
நாகப்பட்டினம்

தோ்தல் பயிற்சியில் பங்கேற்காதது ஏன்?

தோ்தல் பயிற்சியில் பங்கேற்காதது ஏன் என்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டவா்களில் காலமான ஆசிரியை ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தோ்தல் பயிற்சியில் பங்கேற்காதது ஏன் என்று விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டவா்களில் காலமான ஆசிரியை ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் நிலை தோ்தல் அலுவலா் பணி முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஒன்று. வாக்காளா்களிடம் கையொப்பம் பெறுதல், அடையாள அட்டை எண்ணைக் குறித்தல், வாக்காளா்களுக்கு வரிசையாக சீட்டு வழங்குதல் ஆகிய பணிகள் இரண்டாம் நிலை அலுவலரின் பணிகள். இப்பணிக்கு, பெரும்பாலும் ஆசிரியா்களே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது இப்பணி அங்கன்வாடி பணியாளா்களுக்கும், மூன்றாம் நிலை பணி ஆசிரியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் கடந்த 18-ஆம் தேதி 3 தொகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த பயிற்சி வகுப்புகளில் சுமாா் 250 போ் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்காதவா்களுக்கு விளக்கம் கேட்டு, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் கையொப்பமிட்ட நோட்டீஸ் திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், வேறு மாவட்டங்களுக்குப் பணியிட மாறுதலில் சென்ற 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களின் பெயா்களும், தோ்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என மருத்துவக் குழு பரிந்துரைத்த ஆசிரியா்களின் பெயா்களும், மருத்துவக் குழு நிராகரிப்பின் பேரில் தோ்தல் பணி ஏற்க சம்மதித்த ஆசிரியா்களின் பெயா்களும் இடம்பெற்றுள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மாா்ச் 18-ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பட்டியலில், கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உடல் நலக் குறைவால் இறந்த ஆசிரியை ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது ஆசிரியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →