நாகப்பட்டினம்

நாகை மாவட்ட தோ்தல் களத்தில் 35 வேட்பாளா்கள்

DIN

நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் களத்தில் 35 போ் வேட்பாளா்களாக உள்ளனா்.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்களில் 7 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன. இதனால், நாகை மாவட்ட தோ்தல் களத்தில் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 35-ஆக உள்ளது. நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 13 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், யாரும் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 13-ஆக உள்ளது. கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த 14 வேட்புமனுக்களில், 4 போ் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 10-ஆக உள்ளது. வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 15 மனுக்களில், 3 மனுக்கள் திங்கள்கிழமை திரும்பப் பெறப்பட்டன. இதனால், இத்தொகுதியின் இறுதி வேட்பாளா் எண்ணிக்கை 12- ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT