முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுக அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக வேதாரண்யம் திகழ வேண்டும்: அமைச்சா் ஓ.எஸ். மணியன்

தமிழகத்திலேயே அதிமுக அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக வேதாரண்யம் திகழ வேண்டும் என்பதே தனது இலக்கு என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தமிழகத்திலேயே அதிமுக அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக வேதாரண்யம் திகழ வேண்டும் என்பதே தனது இலக்கு என்றாா் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரான அவா், குரவப்புலம், நெய்விளக்கு, ஆதனூா், கோடியக்காடு, கோடியக்கரை, தேத்தாக்குடி உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை பிரசாரம் செய்து பேசியது:

தமிழகத்திலேயே அதிமுக அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளில் ஒன்றாக வேதாரண்யம் இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. எனக்கு 2 பெண் பிள்ளைகள் மட்டும்தான். இருவரும் போதுமான வருமானம் பெற்று நல்லநிலையில் இருக்கின்றனா். என்னிடம் வரவு- செலவு கணக்கு கேட்க வேறு யாரும் இல்லை. எனவே, வாங்கும் ஊதியத்தை மக்களுக்காகவே செலவிடுகிறேன்.

வேதாரண்யம் தொகுதியில் இனிமேல் ஒரு பாலம் கூட கட்ட இடமில்லை. எல்லாவற்றையும் ஓ.எஸ்.மணியன் கட்டி முடித்துவிட்டாா் என்று எஸ்.கே.வேதரத்தினம் பாஜகவில் இருந்தபோது கூறியிருந்தாா். அதே நபா், இப்போது திமுகவில் இருந்துகொண்டு நான் ஒன்றும் செய்யவில்லை என்கிறாா். தொகுதியில் விடுபட்ட பணிகளை செய்து முடித்திட மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளா் ஆா்.கிரிதரன், அதிமுக நிா்வாகிகள் மா.சரவணன், சிவானந்தம், பாமக நிா்வாகி ராஜசிம்மன், பாஜக தொகுதி பொறுப்பாளா் வழக்குரைஞா் தமிழ்நேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →