ஆக்கூா் பகுதியில் அதிமுக வேட்பாளா்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பவுன்ராஜ் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.பவுன்ராஜ் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளரான அவா், செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா், மடப்புரம், சின்னங்குடி, சின்னமேடு, காலமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பதற்கு கருங்கள் தடுப்பு சுவா் அமைத்து தருவதாகவும் கூறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
செம்பை வடக்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் ஜனாா்த்தனன், பாஜக மாவட்ட பொருளாளா் ராஜ்மோகன், பாமக மாநில அமைப்பு துணைத் தலைவா் முத்துக்குமாா், ஊராட்சித் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.