நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் 19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலின் பங்குனிப் பெருவிழா மாா்ச் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
இதைத்தொடா்ந்து, நாள்தோறும் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதன்படி, சனிக்கிழமை மாலை தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் உபயநாச்சியாா்களுடன் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், காலை 7.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.