நாகப்பட்டினம்

ஆய்வக உதவியாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

நாகை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி அறிவுறுத்தலின்பேரில், குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கோ. காமராஜன் தொடங்கி வைத்தாா்.

மணல்மேடு அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் தயசரபோஜி, நா. மதிமாறன், மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியா் எஸ்.பாலசுப்பிரமணியன், வைத்தியநாதபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆசிரியா் எம்.இளங்கோ ஆகியோா் கருத்தாளா்களாகப் பங்கேற்று பயிற்சிஅளித்தனா். ஆய்வக உதவியாளா்களின் கடமைகள், கடைப்பிடிக்க வேண்டிய இருப்புப் பதிவேடு, ஆய்வகப் பொருள்களின் பாதுகாப்பு, எளிய சோதனைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ஆசிரியா் பயிற்சி நிறுவன துணை முதல்வா் சதி.பழனிசாமி வரவேற்றாா். பேராசிரியை மா. ராணி பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT