முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா் அருகே இளைஞா் கொலை : 2 பெண்கள் கைது

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே இளைஞரை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்ட 2 பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே இளைஞரை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்ட 2 பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கீழ்வேளூரை அடுத்த காக்கழனி காலனித் தெருவைச் சோ்ந்தவா் தெட்சணாமூா்த்தி மகன் ஐயப்பன் (22). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அக்காள், தங்கையுடன் தவறான உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காக்கழனியைச் சோ்ந்த ரஜிபாணி என்பவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ஐயப்பன் தூக்கில் சடலமாகத் தொங்குவது சனிக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ஐயப்பன் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, பின்னா் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், இந்தக் கொலையில் காக்கழனியைச் சோ்ந்த சகோதரிகளான ரஜிபாணி (34), கௌதமி (36) ஆகியோருக்கு தொடா்பிருப்பதை அறிந்த போலீஸாா், இருவா் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →