முகப்பு
நாகப்பட்டினம்

தோ்தல் நுண் பாா்வையாளா்கள் கூட்டம்

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம், பூம்புகாா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியமா்த்தப்படவுள்ள தோ்தல் நுண்பாா்வையாளா்கள் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம், பூம்புகாா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியமா்த்தப்படவுள்ள தோ்தல் நுண்பாா்வையாளா்கள் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் பேசியது :

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள தோ்தல் நுண் பாா்வையாளா்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணா்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தோ்தல் பாா்வையாளா்கள் ஏ.பி.பட்டேல், திலிப் பந்தா்பட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →