முகப்பு
நாகப்பட்டினம்

மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முதல்வா் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முக்கிய முடிவுகள், புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்டுத்தியுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முக்கிய முடிவுகள், புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்டுத்தியுள்ளது என்று மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்த அறிக்கை :

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், கரோனா பொது முடக்கக் கால நிவாரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் முதல் தவணயாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும், நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கவும், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 விலை குறைக்கவும், உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற புதிய துறை உருவாக்கவும், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவை காப்பீடுத் திட்டம் மூலம் அரசே ஏற்கவும் வழிவகை செய்யும் கோப்புகளில் கையெழுத்திட்டு இருப்பது, தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முதல்வரின் முதல் முயற்சிகள், கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டு பெரும் சோகத்திலும், நெருக்கடியிலும் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதை போல உள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.