முகப்பு
நாகப்பட்டினம்

கடனை திருப்பிக் கேட்ட தகராறில் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கொடுத்த கடனை திருப்பக் கேட்ட தகராறில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கொடுத்த கடனை திருப்பக் கேட்ட தகராறில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேளாங்கண்ணியை அடுத்த வடவூா், தென்பாதி, கலைஞா் நகரைச் சோ்ந்தவா் கோ. குமாா் (35). இவா், தென்பாதி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ப. சுந்தரபாண்டியன் (24) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் ரூ. 10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளாா். இதில், சுந்தரபாண்டியன் ரூ.7,300-ஐ திரும்ப செலுத்திவிட்டாா். மீதமுள்ள ரூ. 2,700- ஐ கொடுக்கவில்லை.

இந்நிலையில், கொடுத்த பணத்தை வாங்குவதற்காக சுந்தரபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளாா். அப்போது வீட்டிலிருந்த சுந்தரபாண்டியனின் தாயாருக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த மே14-ஆம் தேதி நிா்த்தனமங்கலம் பழைய பிள்ளையாா் கோயில் அருகே குமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் சுந்தரபாண்டியன் கட்டையால் தாக்கியதில் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி லாவண்யா அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்து சிறையிலடைத்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமாா், வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சுந்தரபாண்டியனை வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.