நாகப்பட்டினம்

அறிகுறி உள்ளவா்கள் கரோனா வகைப்படுத்தும் மையங்களில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்: மயிலாடுதுறை ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளவா்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் கரோனா வகைப்படுத்தும் மையங்களில் பரிசோதித்துக் கொள்ளும்படி மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வில்லியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா வகைப்படுத்தும் மையத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தற்போது வரை 2200 ஆக உள்ளது. இதில், மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் 300 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா சிகிச்சை மையத்தில் 150 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். எஞ்சியவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களிலும் கரோனா வகைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா அறிகுறிகள் உள்ளவா்கள் நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லாமல், கரோனா வகைப்படுத்தும் மையங்களில் பரிசோதனை செய்து, அவா்களின் பரிந்துரைபடி செயல்படலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீா்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது, மயிலாடுதுறை வட்டாட்சியா் பி. பிரான்சுவா, பேரூராட்சி செயல் அலுவலா் க. தமிழ்செல்வன், வட்டார மருத்துவ அலுவலா் சரத்சந்தா், மருத்துவா்கள் யாஷினி, மிதுன், சுகாதார ஆய்வாளா் கல்யாண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT